நாளை மிளிரப்போகும் ‘பிங்க் மூன்’ - இந்தியாவில் எந்த நேரத்தில் பார்க்க முடியும்?
மைக்ரோ மூன் என்று அழைக்கப்படும் வசீகரமான நிகழ்வு வானத்தில் தோன்றவுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் மாதத்தில் முதல் முழு நிலவு தென்படும்போது நடைபெறுகிறது. இந்த நிகழ்வானது வசந்த கால வருகையை குறிக்கிறது.
இந்த நிகழ்வை Pink Moon என்று கருத, அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்படும் காணப்படும் pink phlox பூக்களே காரணம். இது குறித்த 1930களில் குறிப்பிடப்பட்ட விவசாயிகளின் பஞ்சாங்கத்தின்படி, ஏப்ரல் மாத இந்த முழு நிலவை கிழக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சில பழங்குடிகள், Pink Moon என்று அழைத்ததோடு இதை அந்த pink phlox பூக்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து நாசா, அட்லாண்டிக் கடற்கரையில் நிழல் மீன்கள் முட்டையிடத் தொடங்கும் காலத்தைக் குறிக்க கடலோர பழங்குடியினரால் முளைக்கும் புல் நிலவு, முட்டை நிலவு மற்றும் மீன் நிலவு போன்ற பல பருவகால பெயர்களால் அழைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த Pink Moon-ஐ நாளை (ஏப்ரல். 13 ) அதிகாலை 3.21 மணி முதல் 5.51 மணி வரை மக்கள் இதை வெறும் கண்களால் காணலாம்.