Ola, Uber இரண்டிலும் ஒரே ஓட்டுநர் - அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!
பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓலா, ஊபர் இரண்டிலும் ஒரே டிரைவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் அல்லது விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.
இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது. இன்னும் சிலர் ஓலா, ஊபர் என இரண்டையுமே புக் செய்து விட்டு எது முதலில் வருகிறதோ அதில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓலா, ஊபர் இரண்டையும் புக் செய்தார்.
பின்னர் ஓலா, ஊபர் இரட்டுக்குமே ஒரே டிரைவர் கிடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நபர் இந்த சம்பவத்தை பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு அதிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பதிவு ஏப்ரல் 4 அன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. அதன் பின்னர் 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் பெற்றது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
Got the same ride on both Ola and Uber. How’s this even possible? pic.twitter.com/GQmeaUsE4O
— shek (@shek_dev) April 4, 2024