நடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!
மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டமானது பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அதன் அடிப்படையில், தற்போது நடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாகவும், அமைதியாக நடத்தும் நோக்கில் இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது
அதேவேளையில், அவையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களுக்கு உரிய நேரம் வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்த உள்ளனர்.
மேலும் கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு செவி சாய்ப்பதில்லை என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இன்றைய இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரத்தை வழங்க வேண்டும், அதேபோன்று எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலை மத்திய அரசு தரப்பில் இருந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது
இந்த மழைகால கூட்டத்தொடரின்போது, ஜன் விஸ்வாஸ் ( திருத்த) மசோதா, 2025,
தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2025, வணிக கப்பல் மசோதா, 2024 உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.