19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.
சமூகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி தண்டனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, 2004 இல் அதிகபட்ச மரண தண்டனை 563 ஆக இருந்தது. டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் 39A-யின் இந்தியாவில் மரண தண்டனை குறித்த வருடாந்திர அறிக்கையின்படி, விசாரணை நீதிமன்றங்கள் 2023 இல் 120 மரண தண்டனைகளை விதித்துள்ளன.
2016 இல் 156 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 488 கைதிகள் சம்பந்தப்பட்ட 303 வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. 2019 -ம் ஆண்டு முதல் பாலியல் குற்றங்களில் மரண தண்டனைகள் உயர்ந்தது. 2023 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றங்களில் சுமார் 64 பேருக்கு (53%) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
75% வழக்குகளில், 12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த வழக்கில் நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்கியது. இந்த நிலையில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.