'தென்னிந்தியாவின் நயாகரா' அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!
கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்து. மேலும் 400 குடும்பங்களை 1000த்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கினர். நேற்றிலிருந்து இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Keralarains triggering huge landslides and flooding across North Kerala,Wayanad region. 20 people died, Many feared trapped.
Athirapally falls today and 3 years back. pic.twitter.com/Vv8noAH1Df
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) July 30, 2024