Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்"- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடுத்த பிரதமர் எங்கள் ராகுல் காந்திதான் என தெரிவித்துள்ளார்.
03:37 PM Aug 23, 2025 IST | Web Editor
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடுத்த பிரதமர் எங்கள் ராகுல் காந்திதான் என தெரிவித்துள்ளார்.
Advertisement

 

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

"நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, 148 கோடி மக்களின் பிரதிநிதியாக நினைத்துக்கொண்டு நெல்லைக்கு வந்துள்ளார். அவர் அங்கே ஜோசியம் சொல்வது போல, பல்வேறு கருத்துகளைப் பேசியுள்ளார். உண்மையில், அவர் தன் மனதில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். அடுத்த பிரதமர் எங்கள் ராகுல் காந்திதான். இதை நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.

பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கருப்புச் சட்டங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டங்கள் மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானவை. விவசாயிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை," என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

விவசாயிகளின் நிலை குறித்துப் பேசும்போது, அவர், "ஒரு ஏழை விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் வாங்கினால், அதைத் திருப்பிச் செலுத்தத் தவறும்போது, அவரது வீடு ஜப்தி செய்யப்படுகிறது. ஆனால், அதானிக்கும், அம்பானிக்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது யாருக்கான ஆட்சி? இது ஏழை மக்களுக்கான ஆட்சியா? இல்லை, ஒரு சில பணக்காரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சியா? இந்த இரண்டு முகங்களை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று கேள்வி எழுப்பினார்.

சமீத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்வப்பெருந்தகை பதிலளிக்கையில், "தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில், நடிகர் விஜய் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 'அங்கிள்' என்று கூறியதை தவிர்த்திருக்கலாம். இது ஒரு அரசியல் நாகரிகம். அரசியல் மேடையில் இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவையில்லை," என்றார்.

"தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அதிக கூட்டம் கூடியதாகக் கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்கு, செல்வப்பெருந்தகை, "கூட்டம் அதிகமாக வந்ததாக அவர்கள் கூறுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தமிழ்நாடு இதைவிட அதிக கூட்டங்களைப் பார்த்துள்ளது. பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்தில், இந்திய வரலாறே கண்டிராத அளவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இது பாஜக அரசின் வீழ்ச்சியைக் காட்டுகிறது," என்று பதிலளித்தார்.

இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Tags :
AmitShahCongressKanyakumariRahulGandhiselvaperunthagai
Advertisement
Next Article