வெளியானது பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் மேக்கிங் வீடியோ!
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இவர் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அதன்படி, இவர் நடித்த ’லவ் டுடே’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘டியூட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி நேற்று (அக்.17) திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆக்கிரமித்தது. தற்போது, இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக இவர் நடித்த இரண்டு படங்களும் காதல் படமாக அமைந்த நிலையில் இப்படமும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
Thankyouu for all the love for #Dude ❤️
Journey Of Dude ❤️#DudeDiwali pic.twitter.com/V71mtHptzL— Pradeep Ranganathan (@pradeeponelife) October 18, 2025
இதனுடன், பைசன், டீசல் உள்ளிட்ட படங்கள் வெளியான போதிலும் டியூட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமான பரவி வருகிறது.