விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட கொல்கத்தா வீரர்.. தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் போட்டியில் எதிர் அணி வீரர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஹர்ஷித் ராணாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பவுலிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட், 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக வீரரான நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 207 ரன்களை எடுத்திருந்தது.
இந்த போட்டியில் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் 21 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 32 ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருந்தபோது, கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஹர்ஷித் ராணா செயல்பட்டதாக அவரது ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 60% அபராதமாக செலுத்த வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.