ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? - சென்னை அணியின் CEO தகவல்..!
இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்ட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கேப்டனாக இவர் மூன்று விதமான ஐசிசி கோப்பைகள், ஆசிய கோப்பை, ஐபிஎல் என அனைத்து விதமன கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியை வழி நடத்திய எம்.எஸ்.தோனி கடந்த 2020 ஆம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் தோனி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். தோனி தலைமையில் 2010,2011,2018,2021,2023 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினர். இதனால் தொடரில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த சிஎஸ்கே அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 10-இல் கடைசி இடம் பெற்றது.
இதனிடையே தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் பரவி வந்தன. ஆனால் தனது உடல் நிலையை பொருத்து முடிவு செய்யப்படும் என்ரு தோனி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.