For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட கொல்கத்தா வீரர்.. தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்!

01:09 PM Mar 24, 2024 IST | Web Editor
விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட கொல்கத்தா வீரர்   தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்
Advertisement

ஐபிஎல் போட்டியில் எதிர் அணி வீரர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஹர்ஷித் ராணாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பவுலிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட், 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக வீரரான நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 207 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து 208 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தலா 32 ரன்கள் என நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் அவர் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார் கிளாசன். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் 21 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 32 ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருந்தபோது, கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதை கொண்டாடும் விதமாக ஹர்ஷித் ராணா, மயங்க் அகர்வால் முகத்திற்கு முன்னால் வந்து ப்ளையிங் கிஸ் கொடுப்பது போல செய்து சீண்டினார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஹர்ஷித் ராணாவின் இந்த செயல் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஹர்ஷித் ராணா செயல்பட்டதாக அவரது ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 60% அபராதமாக செலுத்த வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement