For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் ... எந்த மொழியையும் தவறாக பேசவில்லை - இயக்குனர் அமீர் பேட்டி!

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
11:08 AM Jun 05, 2025 IST | Web Editor
கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல்     எந்த மொழியையும் தவறாக பேசவில்லை   இயக்குனர் அமீர் பேட்டி
Advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள குரு திரையரங்கில் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல் ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்பட இயக்குனர் அமீர் பார்க்க வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

Advertisement

"எனது முதல் படமான மௌனம் பேசியதே படத்திற்கு மணிரத்னம், கமல் சாரும் வந்தார்கள். நாயகன் படத்தை எப்படி கல்லூரி காலத்தில் ஒரு ரசிகனாக பார்க்க முதல்நாள், வந்தேனோ அதுபோல தக்லைப் படத்தை ஒரு ரசிகனாக பார்க்க வந்துள்ளேன்.

கன்னடமொழி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அது ஒரு தேவையில்லாத அரசியல். அவர் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை. கன்னடத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் கன்னட மொழி குறித்து இது தேவையில்லாதவை. முன்பெல்லாம் இவர்தான் நடிக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது எல்லோரும் நடிக்கிறார்கள் சூரி கதாநாயகனாகவும், பலர் கதைநாயகனாக நடிக்கிறார்கள் இதையெல்லாம் வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement