“மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!
புதுச்சேரி கம்பன் கழகத்தின் சாரபில், 58-ஆம் ஆண்டு ‘கம்பன் விழா’ இன்று தொடங்கி 3-நாட்கள் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. துவக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில், கம்பன் விழா மலரை வெளியிட்டு சிறந்த தமிழ் புலவர்களுக்கான நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
மேலும் கம்பன் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வென்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதோடு, கம்பன் கழக புதிய வாழ்நாள் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக துணைநிலை ஆளுநர், அருணகிரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள்- நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, ராமலிங்கம், உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான இராமசுப்பிரமணியன், கம்பன் கழக செயலர் சிவகொழுந்து ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
“இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்ளுகிற பல சிக்கல்களுக்கான தீர்வுகள் கம்ப ராமாயணத்தில் இருப்பதாகவும், ஒரு அரசனின் பொறுப்பு, குடிமக்களின் நலம், நேர்மையான வாழ்க்கை, நம்பிக்கையான உறவு எல்லாம் இந்த காவியத்தில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வோடு வாழ்கிறார்கள் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறிய காவியம் கம்ப ராமாயணம் என்றும் பெருமிதம் கொண்டார்.