For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

01:46 PM Jun 20, 2024 IST | Web Editor
“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு
Advertisement

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை குடித்த 34 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.  மேலும்,  பலர் சிகிச்சையில் இருப்பதால்,  பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை,  கள்ளக்குறிச்சி,  விழுப்புரம்,  சேலம் எனப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், விஷச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஆர்.ஜே.பாலாஜி-யின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்! – போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :

"என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று.  எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். அமைச்சர்கள், உள்துறைச் செயலாளர்,  காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.  இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட,  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்  பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement