For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!

12:26 PM Mar 20, 2024 IST | Web Editor
பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்  தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்
Advertisement

பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Advertisement

பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்துக் கொண்ட நிலையில்,  அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த பேரணி, ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது.  பேரணி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வந்தனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அப்போது சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது,  சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்திருந்தனர். அதுமட்டுமின்றி,  பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள் : அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!

இதில் மாணவர்கள் பள்ளி சீருடையில் அழைத்து வந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.  இதுதொடர்பான புகைப்படங்கள்  வெளியாகி இணையத்தில் வைரலானது.  தேர்தல் தொடர்பான பரப்புரை,  விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.  இதனை மீறிய பாஜகவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.  முன்னதாக,  சாய்பாபா காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கி வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதையடுத்து,  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில்,  பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதற்காக,  கோவை மாவட்டக் கல்வி அலுவலர் தனியார் பள்ளியான வடவள்ளி சின்மயா வித்யாலயா பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Tags :
Advertisement