For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்! மருத்துவ குழுவிடம் மன்னிப்பு கேட்டார் யூடியூபர் இர்பான்!

11:50 AM May 22, 2024 IST | Web Editor
சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்  மருத்துவ குழுவிடம் மன்னிப்பு கேட்டார் யூடியூபர் இர்பான்
Advertisement

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ குழுவிடம்  யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார்.

Advertisement

பிரபல யூ டியூபராக வலம் வரும் இர்பான் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில், இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை இருப்பதால்,  இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்று பாலினம் பற்றி தெரிந்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் அதனை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விளக்கம் அளிக்க இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.  மேலும்,  Youtuber இர்பான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு!

வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று அறிவித்த Youtuber இர்பான் மீது பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,  இர்பான் விசாரணைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரிடம் வாட்ஸ் ஆப்  மற்றும் தொலைபேசி மூலம் மன்னிப்பு கோரினார்.  மன்னிப்பு கோரிய யூடியூபில் வீடியோவை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்,  யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினாலும் அவருடைய குழந்தை பாலினம் குறித்து பதிவிட்டதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement