For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல் - உண்மை என்ன?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக தகவல்கள் பரவியது இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.
04:37 PM Mar 25, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு க  ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியதாக பரவிய தகவல்    உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by  ‘NEWS METER’

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்  ‘இணைப்புச் சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள்'  வழங்கும் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு  ஸ்கூட்டர்கள் விநியோகிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

Advertisement

இந்தத் திட்டத்தைப் பற்றி சொல்லும் அதே வேளையில், பல சமூக ஊடக பயனர்கள் தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மத சமூகத்திற்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு பெண்ணுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஸ்கூட்டரை வழங்கும் புகைப்படத்தைப் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்றும் இந்தத் திட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே என்றும் மறைமுகமாகக் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பயனர் ஒருவர்,  “ஏன் இஸ்லாமியர்கள் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா?   தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா? அல்லது பாகிஸ்தானில் உள்ளதா? என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்:

மேலும் முகநூல் பயனர் ஒருவர், அதே புகைப்படத்துடன் அதே  கேள்வியை கேட்டவாறு பதிவிட்டிருந்தார். இது தொடர்பான பதிவை இங்கே காணலாம்.

உண்மைச் சரிபார்ப்பு :

இந்த கூற்று தவறானது என்றும் இத்திட்டம் அனைத்து மத நம்பிக்கைகளையும் கொண்ட மக்களும் தகுதியானவர்கள் என்று நியூஸ் மீட்டர் குழு  கண்டறிந்துள்ளது.  இது குறித்து அந்த குழு ஆய்வு மேற்கொண்டதில், வைரலான அந்த பதில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் புகைப்படத் தேடல் செய்யப்பட்டது.  அதில் மார்ச் 3, 2025 தேதியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அதே புகைப்படம் கண்டறியப்பட்டது. அதன் தலைப்பு  “நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பெண் இஸ்லாமியர் என்று அதில் கூறவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் நீயூஸ் மீட்டர் குழு அந்த பதிவில் உள்ள சில முக்கிய வார்த்தைகளை தேடியதன் மூலம், தமிழ்நாடு அரசின் பிற நலத்திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த செய்தி கண்டறியப்பட்டது.  அந்த செய்தி மார்ச் 3, 2025 அன்று ETV பாரத் தமிழ்நாடு  செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் "முதலமைச்சர் ஒரு பெண்ணுக்கு மூன்று சக்கர வாகனத்தை பரிசாக அளிக்கிறார்" என்ற தலைப்பு  இடம்பெற்றிருந்து.

அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்:

அந்த செய்தியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் ரூ.423.18 கோடி மதிப்பிலான 35 முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்றும், 206 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டதோடு 38,956 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை. இதன் மூலம் வைரலான புகைப்படத்தில் உள்ள பயனாளிக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியின் ஒருபகுதிதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்  இஸ்லாமியர் என்பதால் ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை என்பது தெளிவானது.

இந்தத் திட்டம் குறித்து அரசு தரப்பில் உள்ள தகவல்களைச் சரிபார்க்கும்போது, ​​இந்தத் திட்டத்தின் மற்றொரு பயனாளியான டில்லி பாபு, வாகனத்தை வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் காணொளியை மார்ச் 4 அன்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டதை நீயூஸ் மீட்டர் குழு கண்டறிந்து, இந்தத் திட்டம் அனைத்து மதப் பின்னணியிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும் என்பதை கண்டுபிடித்தது.

அத்துடன் இந்த ஸ்கூட்டர் பெற்றுக்கொள்ள தகுதியாவர்கள் யார் என்ற தேடுதலை நியூஸ் மீட்டர் குழு ஆராய்ந்தது. அதில் இந்தத் திட்டத்திற்கான தகுதி அளவுகோல்களைப் புரிந்து கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இருப்பது கண்டறியப்பட்டது.

'இணைப்புச் சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள்' திட்டம் மற்ற சமூக நலத் திட்டங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது என்றும் இந்தத் திட்டத்தின்படி,  மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது என்றும்  நியூஸ் மீட்டர் குழு  கண்டறிந்து, மாணவர்கள், வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதி செய்தது.

அரசு வலைத்தளத்தின்படி, தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு: 'பயனாளியின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளி மாணவராகவோ தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ மாவட்டம் பகுதியில் வசிப்பவராகவோ இருக்க வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்  இஸ்லாமியர்களுக்கோ அல்லது வேறு எந்த மதக் குழுவிற்கோ பிரத்யேகமானது என்று குறிப்பிடப்படவில்லை.

நீயூஸ் மீட்டர் குழுவின் இந்த ஆய்வில், சமூக ஊடக தளங்களில் வைரலாகும் பதிவுகளில் கூறப்பட்டுள்ளபடி,  இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும்  ‘இணைப்பு சக்கர ஸ்கூட்டர்கள்' வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்ற முடிவு செய்யப்பட்டு, அந்த கூற்று தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வீடியோ வடிவில் காண:

This story was originally published by  ‘NEWS METER’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement