Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய அணி ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்க வேண்டும்” - சுனில் கவாஸ்கர் கருத்து!

07:20 AM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக 3வது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று நிறைவடைந்த நிலையில், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சரியாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், டெஸ்ட்டில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர்.

தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிச. 14-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக 3வது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக பேசிய அவர்,

“இந்திய அணி மீதமுள்ள போட்டிகளை டெஸ்ட் தொடராக பார்க்க வேண்டும். இந்த டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதை இந்திய அணி மறந்துவிட வேண்டும். அடுத்த 2 நாள்கள் இந்திய அணி அவர்களது நேரத்தை ஹோட்டல் அறைகளில் வீணடிக்காமல் உடனடியாக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை விரும்புகிறேன். அது மிகவும் முக்கியம். இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளிலோ அல்லது வேறு எங்கும் செல்வதற்காகவோ இங்கு இல்லை. அவர்கள் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்துள்ளனர்.

அவர்கள் நாள் முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆனால், அடுத்த இரண்டு நாள்களும் கண்டிப்பாக பயிற்சி மேற்கொள்ளுங்கள். டெஸ்ட் போட்டி 5 நாள்கள் நடைபெற்றால், வீரர்கள் கண்டிப்பாக முழுமையாக 5 நாள்களும் விளையாடப் போகின்றனர். போட்டி சீக்கிரம் முடியும் பட்சத்தில் மீதமுள்ள நாள்களில் வீரர்கள் அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
AdelaideAustraliaGabba TestNews7TamilRohit sharmaSunil gavaskarTeam IndiaTravis Head
Advertisement
Next Article