”தமிழ்நாட்டில் இந்தியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை!
சென்னை திருமுல்லைவாயிலில் காங்கிரஸ் கட்சியின் சக்தி அபியான் அமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணி கட்சிகளை விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில்
இருக்கும் வரை தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசை எதிர்த்து நின்றார். ஆனால் அவர் மறைந்தப் பின்னர் நீட், உதய் மின் திட்டம் என்று அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் இன்று மின்கட்டணம் உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இந்தியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது. அதைப் பிரிப்பது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும். மேலும் தவெக தலைவர் விஜய் அவர்கள் ராகுல் காந்தியை சந்திப்பது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.