"திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
01:39 PM Aug 28, 2025 IST | Web Editor
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"அமித் ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!
Advertisement
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.