For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் பதிவு! என்னவாக இருக்கும்?

11:50 AM Aug 10, 2024 IST | Web Editor
இணையத்தில் புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் பதிவு  என்னவாக இருக்கும்
Advertisement

ஹிண்டன்பர்க் ரிசர்ச் பதிவிட்டுள்ள இந்தியா குறித்த எக்ஸ் பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. 

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், தனது எக்ஸ் பக்கத்தில் "Something big soon India" என்று இன்று காலையில் பதிவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் இந்த எக்ஸ் பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை யாரை பற்றியதாக இருக்கும்? எந்த தொழில் அதிபர் அல்லது எந்த பங்கு சந்தை முதலீடு தொடர்பான விபரமாக இருக்கும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹிண்டன்பெர்க் என்பது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் முதலீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனாகும். இதன் முழுப்பெயர் ஹிண்டன்பெர்க் ரீசர்ஜ் எல்எல்சி (Hindenburg Research LLC). ஹிண்டன்பர்க் நிறுவனம் பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.

ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் குறித்த ஆய்வுக்குப் பிறகு, தனது வலைத்தளம் வழியாக அந்த நிறுவனங்களின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் குறித்த அறிக்கைகளை வெளியிடுகிது. இதன் அறிக்கைகள் மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. ஹிண்டன்பர்க், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவின் அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான
உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்கு, விலையில் மாபெரும் சரிவை சந்தித்தன. ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.

Tags :
Advertisement