For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு!

09:29 PM Feb 20, 2024 IST | Web Editor
திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு
Advertisement

திருமணத்திற்காக ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஐதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா விஞ்ஜம் (வயது 28) . இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமணத்தில் தனது சிரிப்பு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக கடந்த 16ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள எஃப்எம்எஸ் அனைத்துலகப் பல்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

சிகிச்சையின் போதே லட்சுமி நாராயணா திடிரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மயக்க மருந்து அளவிற்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதால் தன் மகன் உயிரிழந்துவிட்டதாக லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு விஞ்சம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து ராமுலு காவல்துறையில் புகாரளித்துள்ளார். அதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பல்மருத்துவமனையின்மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement