Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”காலை உணவுத் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை வரிசைப்படுத்த சீனப் பெருஞ்சுவர் போதாது”- நயினார் நாகேந்திரன்!

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றம் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாட்டியுள்ளார்.
03:49 PM Aug 26, 2025 IST | Web Editor
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றம் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாட்டியுள்ளார்.
Advertisement

தமிழ் நாடு அரசு கடந்த 2022 ஆண்டு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்  திட்டத்தை தொடங்கியது. மேலும் பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று 5 ஆம் கட்டமாக  நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான்னும் கலந்து கொண்டார்.

Advertisement

இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை. பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா?

ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா? உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா?”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
bjptamilanducmmorningschemeDMKlatestNewsTNnews
Advertisement
Next Article