மதுரையில் ஸ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
மதுரை மேலூர் செம்மணிப்பட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோயிலில் 60 அடி உயரத்தில் சோழர் காலத்து முறைப்படி கருங்கற்களால் ஆன ராஜகோபுரம் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 2 ஆம் தேதி கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் யாக கால பூஜைகள், விநாயகர் பூஜை, விஷாந்த சந்த பூஜை, வேதிகா அர்ச்சனை மண்டப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
பின்னர் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜையில் விழா குழுவினர் உட்பட அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுனர். இதையடுத்து யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது அருள்மிகு ஸ்ரீ ஆண்டிபாலகர் கோயில் கோபுரத்திற்கு மஹா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ட்ரோன்கள் மூலம் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.