For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர்!”- கே.எஸ் அழகிரி பேட்டி

06:58 PM Oct 31, 2023 IST | Student Reporter
“ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர் ”  கே எஸ் அழகிரி பேட்டி
Advertisement

பாஜக அலுவலகத்தை நம்பியே தமிழக ஆளுநர் இருக்கின்றார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார்.

Advertisement

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 148வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை சத்திய மூர்த்தி பவனில் இந்திரா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
.
இதனை தொடர்ந்து கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பசுமை சேவை திட்டத்தை கொண்டு வந்தவர், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியவர் , பெண்களுடைய உரிமையை பாதுகாத்தார்,  பெண்களுக்கு என்று ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கினார், பல்வேறு அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்தவர்  என இந்திராகாந்தியின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

வல்லபாய் பட்டேல் சுதந்தரத்துக்கு பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்தவர்,
மகாத்மா காந்திக்கு வலதுகரமாக இருந்தவர், இந்தியாவின் எல்லைகளை
பலப்படுத்தியவர் எனவும், வல்லபாய் பட்டேல் மகாத்மா காந்தியின் உண்மையான சீடராக விளங்கியவர், ஜவகர்லால் நேருவினுடைய அசைக்க முடியாத நண்பராக இருந்தவர், வலிமையான அரசு உருவாக்குவதற்கு ஒரு சிறந்த தலைவராக இவர்கள் இருந்தார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், ஆளுநர் மாநில அரசை சந்திக்க பயப்படுகின்றார், குறை சொல்கிறார், விமர்சிக்கிறார், தமிழக செயலாளரையோ, காவல்துறையோ சந்தித்து அவரது குறைகளை சொல்லலாம். ஆனால் அவைகளால் எல்லாத்தையும் விட்டு பத்திரிகையாளர்களை நம்பி இருக்கிறார்,  பாஜக அலுவலகத்தை நம்பி இருக்கின்றார்,  ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர் எனவும் கூறினார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதியவர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு
வழங்கப்படும். இந்தியாவில் சமூக நீதியை நாம் கொண்டு வந்து இருக்கிறோம், இட ஒதுக்கீடு கொண்டு வந்திருக்கிறோம், ஒரு துல்லியமான கணக்கெடுப்பினால் இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க முடியும். இந்த காரணத்தினால் தான் ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று எங்களது தலைவர் கூறுகிறார். இதன் மூலமாக இட ஒதுக்கீடு அனைவருக்கும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிதம்பரத்தில் வருகின்ற 6 ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்த
கருத்தரங்கம் நடத்த உள்ளோம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Tags :
Advertisement