கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? - சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!
கேரளாவில் நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.
மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையின் முடிவில் பாதிக்கப்பட்ட நபருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதாக என்கிற தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நிஃபா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!
கேரள சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு குழுக்களை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.