For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.2,999க்கு மேல் சாப்பிட்டால் ‘#GOAT’ டிக்கெட் இலவசம்! எங்கு தெரியுமா?

12:23 PM Sep 01, 2024 IST | Web Editor
ரூ 2 999க்கு மேல் சாப்பிட்டால் ‘ goat’ டிக்கெட் இலவசம்  எங்கு தெரியுமா
Advertisement

ரூ.2999க்கும் மேல் அசைவ உணவு சாப்பிட்டால் விஜய் நடித்துள்ள ‘The GOAT’ படத்தின் முதல் காட்சிக்கான இரண்டு டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என தனியார் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் நேற்று இப்படத்தின் நான்காவது பாடலான ‘மட்ட’ பாடல் வெளியானது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரூ.2999க்கும் மேல் உணவு சாப்பிட்டால், விஜய்யின் கோட் திரைப்படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கப்படும் என தனியார் உணவகம் ஒன்று போஸ்டர் ஒட்டியுள்ளது. மதுரை வில்லாபுரத்தில் இயங்கி வரும் கோச்சடை பசியாரு என்ற உணவகம், 2999 ரூபாய்க்கு மேல் அசைவ உணவு சாப்பிடுவோருக்கு, கோட் திரைப்படத்தின் முதல் காட்சிக்கான இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும் அவனியாபுரம் சுற்று வட்டார பகுதிகளிலில் போஸ்டர்களை ஒட்டியுள்ளது.

Tags :
Advertisement