For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரியாணி மட்டுமல்ல! அதுவும் இருக்கு...” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கொண்டா சுரேகா!

11:24 AM Nov 22, 2024 IST | Web Editor
“பிரியாணி மட்டுமல்ல  அதுவும் இருக்கு   ”   மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கொண்டா சுரேகா
Advertisement

“பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு” என இன்ஸ்டாகிராம் லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தெலுங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் தற்போது மீண்டும் ஒரு புது விவாதத்தில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, “இன்று நமக்கு பண்டிகை நாள். அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும்” என்று கூறுகிறார்.

இவரைத் தொடர்ந்து எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர், “மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா? என்று கேட்கிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சுரேகா, “பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும். எவ்வளவு பீர் வேண்டுமோ, அவ்வளவு பீர் வாங்கி கொடுக்க வேண்டும். அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும். ஒரு சிலர் அது உள்ளதா என்று கேட்டார்கள். பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறேன்” என்று கூறுகிறார்.

இடையில் புகுந்த மற்றொரு பெண், வாரங்கலில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓட
விடுகிறார். இங்கு சுரேகா அதுபோல் செய்வார்” என்று கூறுகிறார். இந்த இன்ஸ்டா
லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement