வாங்கிய பொருட்களை கடையில் திருப்பிக் கொடுத்த சிறுமி... வாங்க மறுத்த கடை உரிமையாளர்... சிறுமி செய்த அதிர்ச்சி செயல்!
உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவாவில் உள்ள கிருஷ்ணகஞ்ச் பகுதியில் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 15 வயது சிறுமி ஒருவர் சில பொருட்களை வாங்கினார். பின்னர் அந்த பொருட்களை திரும்பெறும்படி கடை உரிமையாளரிடம் கோரினார். ஆனால் அதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமி கடை உரிமையாளரை தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் அந்த சிறுமி தான் வைத்திருந்த பிளோடால் கடை உரிமையாளரை தாக்கி விட்டு அங்கிருந்த ஓடினார். கடையில் இருந்தவர்கள் அந்த பெண்ணை துரத்தி பிடித்தனர். சிறுமி தாக்கியதில் கடை உரிமையாளருக்கு கைகள் மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் சிறுமி மீது போலீசில் புகார் அளித்தனர்.
இதையும் படியுங்கள் : தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் (கடை உரிமையாளர்) கூறுகையில், "அந்த சிறுமி பலமுறை இவ்வாறு செய்திருக்கிறார். அவர் சில பொருட்களை வாங்குவார். அதனை சில நாட்கள் பயன்படுத்திவிட்டு என்னிடம் வந்து திருப்பிக் கொடுப்பார். நான் பலமுறை பொருட்கை திரும்பப் பெற்றுக்கொண்டு அவருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளேன். இந்த முறையும் அவர் சில நாட்கள் பொருட்களை பயன்படுத்திவிட்டு என்னிடம் திருப்பி கொடுத்தார். நான் இந்த முறை அதனை வாங்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை தாக்கினார்" என்றார்.
அந்த சிறுமி மனநலச் சீர்வேண்டுவோர் என்றும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.