For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி!

03:41 PM Dec 02, 2023 IST | Web Editor
கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி
Advertisement

கூகுள் மேப்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து, அதன் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

Advertisement

அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் செயலியின் வடித்தை,  கூகுள் அண்மையில் மாற்றம் செய்திருந்தது.  பலரும் இந்த மாற்றத்தை வரவேற்றிருந்தாலும், தேவையற்ற சில அம்சங்கள் இருந்ததை பலரும் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.  இந்த மாற்றம் குறித்து கூகுள் மேப்ஸ் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  கல்லூரி மாணவியை கொலை செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரன் கைது!

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  கூகுள் மேப்ஸ் செயலியில் இருக்கும் தவறுகள் என அவர் நினைக்கும் அனைத்தையும் மிக விரிவாக அலசியிருக்கிறார்.  கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய வடிவமைப்பு அவருக்கு விரும்பும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நான் விரும்பவில்லை.  இது மிகச் சாதாரணமாக உள்ளது.  மேலும் துல்லியமற்றதாகவும்,  புரிந்துகொள்வதில் சிக்கலாகவும் உள்ளது. மிகவும் முக்கியமாக,  இந்த செயலியை மிக எளிமையாக,  நேர்த்தியாக உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரைபடத்தின் அதாவது மேப்புக்கு மேல் ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன.  தற்போது 11-க்கும் மேற்பட்ட தகவல்கள் விரிகின்றன.  இது கிட்டத்தட்ட ரியல் எஸ்டேட் ஆப் போல உள்ளது.  விவரங்கள் குறைவாக இருந்தால்தான் இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில், மிக எளிமையாக, நேர்த்தியாக,  துல்லியமாக இருக்கும் வகையில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement