For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒரேநாளில் இரண்டு முறை ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

ரஷியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
07:48 AM Nov 04, 2025 IST | Web Editor
ரஷியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்   ஒரேநாளில் இரண்டு முறை ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
Advertisement

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 2.14 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

Tags :
Advertisement