For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்" - ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!

07:01 AM May 30, 2024 IST | Web Editor
 சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை   மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்    ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு
Advertisement

"சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்" என ’வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியுள்ளார்.

Advertisement

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள  "வேட்டைக்காரி" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கவிப்பேரரசு வைரமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு தெரிவித்ததாவது..

” கவிஞர் வைரமுத்து இப்படத்தின் பாடலை வெளியிடும் போது நடிகை சஞ்சனா பாடலை உடன் சேர்ந்து பாடினார் சரியாக தமிழ் தெரியாத அவரே பாடும் போது கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு கிடைத்த வெற்றி.

என் முதல் படத்தின் பெயரை வைத்தவர் வைரமுத்து தான். ஏனென்றால் நாங்கள் வைத்த
படத்தின் பெயரை வேறு ஆட்கள் பதிவு செய்ததால் புது பெயரை வைக்க மிக யோசித்தோம். அப்போது திருப்பாச்சி அருவாள தீட்டிக் கிட்டு வாடா வாடா என்ற பாடல் ஒலித்தது. அதில் இருந்து திருப்பாச்சி என்ற பெயரை எடுத்துக் கொண்டேன்.

இப்போது ஒரு பாடல் வெற்றி பெற்று விடுகிறது, ஆனால் படம் வெளியாகி முடிவதற்குள்
பாடல் வெற்றியும் முடிந்து விடுகிறது. இசை ஒரு பாடலை வெற்றி அடைய வைத்து விடுகிறது. ஒரு பாடல் வெற்றி அடைய இசை காரணம். காலம் காலமாக ரசிகர்கள் மனதில் நிற்க வைப்பது பாடல் வரிகள் தான்.

அதற்கு கண்ணதாசன், வாலி உள்ளிட்டவர்களின் பாடல்கள் பல எடுத்துக்காட்டு.
புரட்சி தலைவர் கூட அவர் படங்கள், அரசியலில் வெற்றி அடைய மக்கள் நம்பிக்கை
வைக்க செய்தது பாடல் வரிகள் என்று அவரே சொல்லி உள்ளார். பாடல் வரிகள் கருத்துள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருந்தால் தான் நீண்ட நாள் நிற்கும். எனக்கு சோகம் வரும் போது நான் கேட்கும் பாடல் " ஊரை தெரிஞ்சு கிட்டேன் உலகம் புரிஞ்சு கிட்டேன்" பாடல் தான்

காட்சி, பாடல் வரிகள், இசை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்க வேண்டும். முதல் மரியாதை பாடல்களை கேட்டு எல்லாரும் ஐக்கியமாகி விட்டோம், காதல் ஓவியம் பாடலில் வாழ்ந்துள்ளோம். இசையுடன் பாடல் வரிகள் உயிர் கொடுத்து உள்ளது. இசை மட்டுமே போதாது. பாடல் வரிகள் வேண்டும், அதை தந்து சிறப்பாக செயலாற்றி
வருபவர் வைரமுத்து.  கவிப்பேரரசு வைரமுத்து சென்னைக்கு வந்து 40 , 50 ஆண்டுகள் ஆனாலும் அவருக்குள், கிராமம் தான் உள்ளது, கிராமத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை
இன்னும் பாடல்களில் பயன்படுத்தி வருகிறார் “ என பேரரசு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது..

கலைத் துறைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை . பள்ளி நாட்களில் இருந்தே நான்
படத்துறையை விட்டுத் தள்ளி நிற்கிறவன்.  இன்று இந்த விழாவுக்கு வந்து நான் கலை
உலகத்தோடு உறவாட வந்திருக்கிறேன். எனக்கு இது அந்நியமாக இருக்கிறது என்ற
பொருளில் நம்முடைய மீசை அமைச்சர் இன்று அற்புதமான உண்மையைச் சொன்னார், ஆனால் உங்களுக்கு கூட்டுறவுத்துறை மட்டும் போதாது, பாட்டுறவுத் துறையும் வேண்டும்
என்ற எண்ணத்தில் அழைத்திருக்கிறார்.

*பூவே பூச்சூடவா, நீதானே எந்தன் பொன் வசந்தம், படத்தலைப்புகள் எல்லாம் என்
பாடல் வரிகள் தான் இப்போது தான் திருப்பாச்சி கூட என் பாடல் வரிதான் தெரிகிறது. இப்படி எனக்குத் தெரியாத எத்தனை பெயர்கள் உள்ளது தெரியவில்லை, நீங்கள் ஏன்
கேட்கவில்லை என்று பலர் கேட்டனர், அதற்கு ஜெயகாந்தன் சொன்ன பதிலை தான்
நானும் சொல்கிறேன், இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

எப்படியோ நல்ல தமிழ் தலைப்புகளை கேட்கும் போது வாசிக்கப்படுகிறது, ஒரு தலைப்பு
தமிழ் சமுதாயத்தில் சுழற்சி முறையில் சுழன்று கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து படம் நன்று ஓடினால், அதற்கு சான்று தந்தால் ஏற்றுக் கொள்கிறேன், தமிழில் தலைப்பு வைத்தால் படம் ஓடாது என்று சொன்னால் அதற்கும் சான்று தாருங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒரு நடிகர் தன்னை close up இல் வைக்க சொன்ன போது எத்துப் பல்லாக உள்ளது,
அசிங்கமாக உள்ளது என்று சொன்னார்கள், அப்படி நிராகரிக்கப்பட்டவர் எம் ஜி ஆர். ஒரு படத்தில் ஒரு நடிகர் வசனம் பேசினால் மீன் வாய் திறப்பது போல உள்ளது வாயை
திறக்காமல் பேச சொல்லுங்கள் என்றனர், அப்படி சொல்லப்பட்ட நடிகர் சிவாஜி
கணேசன்.

கவிதை எப்போது இசையுடன் இணைந்து கொடி கட்டி பறக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ் பாட்டு உச்சத்தில் கொடி கட்டி பறந்து இருக்கிறது . காலை யோகாசனமும் நடைப்பயிற்சியும் முடித்து பத்திரிக்கை படிக்க உட்காருகிறேன் தொலைபேசி வருகிறது 6:15 நேத்து சாயங்கால நீங்க பேசுற பேச்சு அற்புதம் பின்னிட்டீங்க இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று விமர்சனமும், பாராட்டும் வருகிறது.

ஒரு நல்ல கவிதை கிடைத்தால் ஒரு பாடல் ஆசிரியர் பாடலாக்கி விட வேண்டும் என்று
துடிப்பார். இப்போது நல்ல பாடல்கள் வருவதில்லை தெரியுமா? எதற்கு பஞ்சம் என்றால் பாடல்களை உட்கார வைக்க படத்தில் இடம் இல்லை, படத்தில் பாடலை உட்கார வைக்க இடுப்பு இல்லை. ஒரு பாடலை ஐந்து நிமிடத்திற்கு கூட பயன்படுத்த உங்கள் படத்தில் இடமில்லை.

ஆங்கில படத்தில் படத்தோட படமாய் பாடல்கள் தேய்க்கப்பட்டு விடுகிறது, அதை
தமிழ் படத்தில் பயன்படுத்தாதீர்கள். தமிழில் பிறக்கும் போது, தவழும் போது, நடக்கும் போது, இறக்கும் தருவாயில் கூட பாட்டு உள்ளது. படத்தில் பாட்டு நிற்க வேண்டும் என்றால் அதற்கு தனி ஸ்கிரீன் பிளே இருக்க வேண்டும்.

நாளுக்கு நாள் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் தமிழர்கள் எண்ணிக்கை
குறைந்து வருகிறது என்று என் திரையரங்க உரிமையாளர்களாக இருக்கும் நண்பர்கள்
தெரிவித்தனர். காதலர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், திரைக்கு எதிர்ப்புறம் திரும்பி உட்காருகிறார்கள். சினிமா இங்கு ஓடுகிறது, அவர்கள் படம் அங்கு ஓடுகிறது.

கோடை காலத்தில் 50 ரூபாய் கொடுத்தால் 2 மணி நேரம் ஏ சி யில் இருந்து விட்டு
வரலாம் என்று திரையரங்குகளுக்கு வருகிறார்கள். சினிமா வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை, மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும் அது தன் வடிவத்தை தான் மாற்றிக் கொள்ளும். பத்திரிகையாளர்கள் சர்ச்சையை உருவாக்கி விடாதீர்கள் உங்கள் சர்ச்சையை எங்களால் சமாளிக்க முடியவில்லை” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement