For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

07:23 PM Dec 08, 2023 IST | Web Editor
வெளியானது ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தின் முதல் பாடல்
Advertisement

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் ‘ஃபைட் கிளப்’. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில்  ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘யாரும் காணாத விண்மீனே’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர். இசை - கோவிந்த் வசந்தா. இப்பாடலின் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசர் மூலம் யூடியூப்பில் 3.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags :
Advertisement