’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானது
காந்தார படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சப்தமி கவுடா. இவர் தற்போது ' தி ரைஸ் ஆப் அசோகா’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பி சுரேஷ், ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா, யாஷ் ஷெட்டி, டிராகன் மஞ்சு, மற்றும் விக்ரம் வேதா-புகழ் ஹரிஷ் பேரடி ஆகியோர் நடிக்கின்றனர்.
தயானந்த் டி.கே கதை எழுதியுள்ள இப்படத்தை விருத்தி கிரியேஷன்ஸ் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் தயாரித்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியாகி இருக்கிறது.
Join the chorus of hearts…
Let’s awaken #YeloMadeva with love 💖#TheRiseOfAshoka 1st Single #YeloMadeva #KelaaiMadeva #VinaraMadeva OUT NOW 😊https://t.co/mjXvYGp4vgA new era begins | #TheRiseOfAshoka 🔥🔥 pic.twitter.com/3ycdixtHVb
— Lahari Music (@LahariMusic) November 25, 2025