For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

08:58 AM Jul 17, 2024 IST | Web Editor
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகிறது  விடுதலை 2  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Advertisement

வெற்றிமாறன் இயக்கும்  'விடுதலை 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வெற்றிமாறன் வைத்திருந்தார். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் 16லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை - யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்நிலையில், விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11:30 மணியளவில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement