இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! - தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பு!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர். தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்காக அதிகாலை முதலே காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து வரிசைப்படுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு.. : அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள் – சிறப்பு தொகுப்பு
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோரால் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர்.