For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு! - ‘கல்கி 2898AD’படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!

10:02 PM Jun 16, 2024 IST | Web Editor
ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு    ‘கல்கி 2898ad’படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
Advertisement

‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் நாளை வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.  இத்திரைப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் திரைப்படம், பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதைபோலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.

இதையும் படியுங்கள் : டி20 உலகக்கோப்பை – அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

கடந்த 10ம் தேதி ‘கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரெய்லரில் இருக்கும் பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்த்தன. நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது, இறுதியில் வரும் கமல்ஹாசனின் தோற்றம் இந்த திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'Bhairava Anthem’ இன்று இரவு 8 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், நாளை காலை 11 மணியளவில் முதல் பாடலான 'Bhairava Anthem’  வீடியோ வடிவில் வெளியாகும் என படக்குழு மாற்றி அறிவித்துள்ளது. இதை படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

Tags :
Advertisement