For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிலவின் ‘தொலை தூரப் பக்கம்’ | நாசா பகிர்ந்துள்ள அரிய புகைப்படம்…!

09:06 AM Feb 08, 2024 IST | Web Editor
நிலவின் ‘தொலை தூரப் பக்கம்’   நாசா பகிர்ந்துள்ள அரிய புகைப்படம்…
Advertisement

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நாம் இதுவரை பார்த்திராத நிலவின் தொலைதூரப் பகுதியை படம் எடுத்து அனுப்பியுள்ளது.   

Advertisement

"இது நிலவின் ஒரு பகுதி. நம் பூமியில் இருந்து பார்க்க முடியாத பகுதி, தொலைதூர நிலவுப் பக்கம்" என்று நாசா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவொன்றினை இட்டுள்ளது.

சந்திரனின் புறப்பகுதி ஏராளமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளதாகவும், இது அதிக பள்ளம் மற்றும் குறைவான மரியா அல்லது பெரிய, இருண்ட, பாசால்டிக் சமவெளிகளை ஆரம்பகால எரிமலை வெடிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மரியா என்று அழைக்ப்பது நிலவின் இருண்ட பகுதிகளை ஆகும், மரியா என்பது "கடல்" என்பதற்கான லத்தீன் வார்த்தையாகும், ஆரம்பகால வானியலாளர்கள் இருண்ட பகுதிகள் பெருங்கடல்கள் என்று நினைத்தனர்" இதனாலேயே இருண்ட பகுதிகளை மரியா என்று என்று வழங்கியதாக விண்வெளி நிறுவனம் விளக்கியது.

நாசாவின் கூற்றுப்படி, இந்த புகைப்படம் ஏஜென்சியின் லூனார் மூலம் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வெவ்வேறு சந்திர தூரப் படங்களாகும், இந்தப் படம் சந்திரனின் வட்டமான, சாம்பல் நிற உருவைக் காட்டுகிறது, எல்லா அளவுகளிலும் பள்ளங்கள் கொண்ட அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சந்திரனின் ஒரே பக்கத்தையே எப்போதும் நாம் காண்கிறோம், ஏனென்றால் சந்திரன் நமது கிரகத்துடன் அலையுடன் பூட்டப்பட்டுள்ளது, அதாவது சந்திரனின் சுற்றுப்பாதை காலம் அதன் அச்சில் சுழலும் அதே கால அளவாகும், சந்திரன் ஒரு முறை திரும்புவதற்கு பூமியில் ஒரு மாதம் முழுவதும் ஆகும்," என்று நாசா விளக்கியுள்ளது.

நாசா லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (LRO) விண்கலத்தை ஜூன் 2009-ல் விண்ணில் ஏவியது, எல்.ஆர்.ஓ விண்கலம் மினி கூப்பர் காரின் அளவைக் கொண்டிருக்கும் எனவும் இதில் நிலவை ஆய்வு செய்வதற்கான 7 கருவிகள் உள்ளதாகவும், விண்கலம் சந்திரனை ஒரு துருவ சுற்றுப்பாதையில், சுமார் 50 கிலோமீட்டர் உயரத்தில் வட்டமிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், எல்.ஆர்.ஓ நிலவின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கியது, இது எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை தரையிறக்க சரியான இடத்தை தேர்வு செய்ய உதவும் எனக் கூறியுள்ளது, அதுமாத்திரமன்றி, துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உள்ள இடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வில் நாசா கண்டறிவதற்காக, எல்.ஆர்.ஓ தொடர்ந்து சந்திரனைச் சுற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement