Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கி தடம் பார்க்கும் நிகழ்வு | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

08:02 PM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

சித்திரை திருவிழாவில் மீண்டும் வைகை தந்த கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

சித்திரை திருவிழாவில் ராஜாங்க திருக்கோலத்தில் தந்தப்பல்லாக்கு எனும் அனந்தராயர் பல்லக்கில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.  வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய இடத்தை தடம் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.  கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் அழகர்கோயிலில் இருந்து ஏப்ரல் 12 ல் புறப்பட்ட கள்ளழகர் ஏப்ரல் 23 தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏப்ரல் 24 ஆம் தேதி வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை வரை விடிய விடிய கள்ளழகருக்கு தசாவதாரம் நடைபெற்றது. 7 ஆம் நாள் திருவிழாவின் இன்று மாலை நிகழ்வாக கள்ளழகர் திவான் இராமராயர் மண்டபத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் தந்தப்பல்லாக்கு எனும் அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளம் நோக்கி புறப்பட்டார்.

திவான் இராமராயர் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மதிச்சியம், மூங்கில் கடை தெரு வழியாக வந்த கள்ளழகர் வைகையாற்றுக்குள் இறங்கி தடம் பார்த்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை கோவிந்தோ கோவிந்தோ என கோஷமிட்டு வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் காணப்பட்டு அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது

பின்னர் அழகர்மலையை நோக்கி புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏப்ரல் 27 ல் காலை 10.32 மணி முதல் 11 மனிக்குள்ளாக கள்ளழகர் அழகர்கோயிலுக்கு சென்றடைகிறார்.

Tags :
chithirai thiruvizhakallazhagarMadurai
Advertisement
Next Article