”தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளது”- ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது . மேலும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்ற 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 4-வது நாளாக அவை இன்று கூடியது இன்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதற்கிடையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
”கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்துள்ளது. இந்தியாவில் வாக்குகள் திருடப்படுகிறது; கர்நாடகத்தில் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெற்றது என்பதைத் தனது கட்சி கண்டுபிடித்துள்ளது. அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது” எனவும அவர் கூறினார்.
மேலும் அவர், ”பிகாரில் நடந்துவரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டபோது, தேர்தல் அதிகாரிகள் இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் முகவரிகளில் இல்லை என்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து ராகுல் இந்த கருத்துளை வெளியிட்டுள்ளார். பிகாரில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அங்குள்ள வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நோக்கமாகக் தேர்தல் ஆணையம் நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கட்சி போராடி வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.