Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா" - வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!

தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா என்று வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
11:17 AM Sep 27, 2025 IST | Web Editor
தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா என்று வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "5 ஆம் தேதி துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை புரிகிறார். சிறப்பான வரவேற்பு மேற்கொள்ள பாஜக சார்பிலும் தொழில் நிதுவனங்கள் சமூக அமைப்புகள் பாராட்டு விழா மேற்கொள்ள உள்ளோம். டி.ஆர்.பி ராஜா வடமாநில பெண்களை அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சாலை விபத்தில் அதிகம் உயிரிழக்க கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.

Advertisement

தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா. சினிமா துறையை சார்ந்தவர்களை கொண்டு பேச வைத்து துறைக்கு சம்பந்த மில்லாதவர்களை பேச வைத்து டிராமா நடத்தி உள்ளனர். இது திமுக விற்கு புதிதல்ல, திராவிட மாடல் அரசு என்றாலே டிராமா அரசு தான். சுதந்திர போராட்டம், மறுமலர்ச்சிக்காவும் வரலாறு முக்கியத்துவம் பங்களிப்பை வடமாநில பெண்கள் தந்து உள்ளனர். வடமாநிலத்தில் கல்வி பின் தங்கி உள்ளதற்கு திமுக கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தான் காரணம். இந்திய பெண்கள் அடுத்த தளத்தில் முன்னேறி வருகின்றனர். பிரதமரின் திட்டத்தால் அரசியலுக்காக வடக்கு. தெற்கு என பிரிவினை ஏற்படுத்தாதீர்கள்.

முதலமைச்சார் ஸ்டாலின் திட்டம் துவங்குவயற்கும் மகக்ளிடம் அந்த திட்டம் மக்களிடம் கொண்டு சேர்வதற்கும் வித்தியாசம் இருக்குறது, கேமரா முன் நல்லாதான் இருக்கு. டிராமா அரசாங்கத்தின் நடவடிக்கைதான் தமிழக அரசின் கல்வி விழா. அரசு பள்ளிக் கூடஙக்ளை மூடுவது ஆசிரியரக்ள் பற்றாக்குறை , வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் பள்ளி நடத்துவது, பள்ளி குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பள்ளிகளிலே சாதி ரீயியான மோதல் இதையெல்லாம் கல்வியில் சிறந்த மாநிலத்தில் சேர்த்துக் கொள்வார்களா?

மக்களை ஏமாற்ற துறைக்கு சம்பந்தமில்லாத சினிமா துறையினரை வைத்து பேச வைத்து உள்ளனர். கோவையில் காப்பகத்தில் சிறார்கள் தாக்கபப்ட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு, "ஆதரவற்ற குழந்தைகளை வன்முறைக்கு உள்ளாக்குவது வேதனையாக உள்ளது. காப்பகத்தில் சரியாக ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதும் இது போன்ற சம்பவஙக்ளுக்கு காரணம்.

விஜய் ஒரு பக்கம் தி.மு.க அரசை சாடும் போது நடிகர் சிவகார்த்திகேயன் அணமையில் நடைபெற்ற விழாவில் புகழ்ந்து பேசியது தொடர்பான கேள்விக்கு "தஙக்ள் மீதான விமர்சனங்களை துறைக்கு சம்பந்தமிலலத சினிமா பிரபலங்களை வைத்து பேச வைப்பது, திமுகவிற்கு புதித்தல்ல என்றார். பூ வாஙக் சென்ற பெண்ணிடம் உடை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, அதே சமயம் பொது இடம் எனும் போது கண்ணியமும் தேவை இதெல்லாம் அவரவர் சுய விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BJPDMKgovernmentkovainew dramatamil naduvanathi srinivasan
Advertisement
Next Article