கிரகணம் முடிந்து திருமலை ஏழுமலையான் கோயில் நடை திறப்பு!
சந்திரகிரகணமானது நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. மரபுபடி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்களின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் கதவுகள் மூடப்பட்டது. அதேபோல் கிரகணத்தை ஒட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் கிரகணம் முடிந்த பின் இன்று காலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சாஸ்திர ரீதியில் கோவில் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு மீண்டும் திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படும். நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லட்டு பிரசாத உற்பத்தி மீண்டும் துவங்கி உள்ளது.