For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலைநிறுத்தம் எதிரொலி - பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்!

09:59 AM Jan 09, 2024 IST | Jeni
வேலைநிறுத்தம் எதிரொலி   பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன.  அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,  நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தை தொடங்கினர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும்,  வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.  பல ஓட்டுநர்கள்,  நடத்துநர்கள் பணிக்கு வராததால்,  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படாமல்,  குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இதனால், இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில்,  மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வழக்கமாக வரும் பேருந்துகள் இன்று முறையாக இயக்கப்படவில்லை.  இதனால் நீண்ட நேரம் காத்திருந்து,  சென்னையில் இருந்து வரும் அரசு விரைவுப் பேருந்துகளிலும்,  தனியார் பேருந்துகளிலும் அப்பகுதி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத பேருந்துகள் இயக்கம்..?

இதனிடையே மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று, நெல்லைக்குச் செல்லாமல் கோவில்பட்டி அருகே பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டது.  வேறு பேருந்து மூலம் நெல்லைக்குச் செல்லுமாறு போக்குவரத்து ஊழியர்கள் கூறியதால்,  அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி வேறு பேருந்து மூலம் நெல்லைக்குச் சென்றனர்.

Tags :
Advertisement