‘குட் பேட் அக்லி’ டப்பிங்கை தொடங்கிய அஜித்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜித் துவங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.