”புதிய யோசனையுடன் தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு...!
கோவையில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியது, ”நான் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து 15 முறைக்குமேல் கோவைக்கு வந்துள்ளேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல வருங்காலத்திலும் உங்களது ஆதரவை தர வேண்டும். இந்த அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்த 11.19 விழுக்காடு வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ள தமிழ்நாட்டு வந்துள்ளீர்கள்.
புதிய யோசனையுடன் இளைஞர்களை தொழில் தொடங்க வந்தால் அவர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. சிறுசிறு கிராமங்களுக்கு சென்று ஸ்டார்ட் அப் திருவிழா நடத்தி தொழில்முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். 12663 தொழில்முனைவோர் நிறுவனங்கள் தற்போது உருவாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. வெளிப்படையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தவறான தகவல்களையும் தவறான செய்தியையும் பரப்பபுகிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டி போட்டு தொழில்களை இங்கு கொண்டு வருகிறோம். சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் நான்கு பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.