Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு.." - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஊழல் வேட்கையில் திமுக அரசு  இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
12:30 PM Oct 29, 2025 IST | Web Editor
ஊழல் வேட்கையில் திமுக அரசு  இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
Advertisement

ஊழல் வேட்கையில் திமுக அரசு  இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ரூ.888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு.

இரு மாதங்களுக்கு முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது. காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCMO TAMIL NADUDMKkarurMK Stalinnainar nagendranTN Govt
Advertisement
Next Article