For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி டாக்டர் பட்டம்: ‘மை வி 3 ஆட்ஸின்’ விநியோகர் கைது!

01:01 PM Mar 02, 2024 IST | Web Editor
போலி டாக்டர் பட்டம்  ‘மை வி 3 ஆட்ஸின்’ விநியோகர் கைது
Advertisement

மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஹெர்பல் ப்ராடக்டுகளை விநியோகம் செய்து வரும்  விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் பெற்றதாக கோவை மாநகர குற்றபிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

கோவை வெள்ள கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி ஆனந்தின் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தில் ஹெர்பல் ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.  இதனை வாங்கும் நுகர்வோர்கள் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கடந்து,  ஃபாலோவர்களாக மாறுகின்றனர்.  அவர்கள் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என மை வி3 ஆப்ஸ் நிறுவனத்தார் தெரிவிக்க,  50 லட்சம் பேர் இந்த நிறுவனத்தை பின்தொடர்கின்றனர்.

போலீசார் நடத்தி வரும் விசாரணையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தாருக்கு சித்துவா ஹெர்பல் தயாரிப்பு நிறுவனத்தினர் ஹெர்பல் ப்ராடக்டுகளை விநியோகம் செய்து வருவது தெரியவந்தது.  80-க்கும் ப்ராடக்டுகளை மை வீ3 ஏட்ஸ் நிறுவனத்துக்கு தயாரித்து தந்திருக்கின்றனர்.  இதுகுறித்து நடந்திய விசாரணையின் போது,  அதன் உரிமையாளர் விஜயராகவன் நேச்சுரோபதியில் பிஎச்டி பட்டம் பெற்றதாக தெரிவித்து சான்றிதழ்களை தந்திருக்கின்றார்.

இந்த சான்றிதழ்களை சரிபார்க்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.  பல்கலைக்கழக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது இது போலியானது என தெரிய வந்துள்ளது.  இதனைத்தொடர்ந்து இதுகுறித்து கிரைம் நெம்பர் 13/24, 465 468 471, 420 ஐ.பி.சியில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி டாக்டர் விஜயராகவனை மதுரையில் கைது செய்தனர்.

பின்னர் கோவை அழைத்துவரப்பட்ட விஜயராகவனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement