சாப்பிடாமல் இருந்த மகள்... கண்ணீர்விட்டு அழுத தந்தை! குழந்தைகளிடையே தொடரும் ஐபோன் மோகம்!
19 வயது சிறுமி ஒருவர் ஐபோனுக்காக சாப்பிடால் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பூ விற்பனையாளரின் மகன் ஒருவர் மூன்று நாட்கள் சாப்பிடமால் இருந்து, ஐபோன் வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் அதே செயலில் ஈடுபட்ட பெண்ணின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. kajucatli எனும் ரெடிட் பயனர் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
"என் உறவினர் (19f) கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. ஐபோன் கேட்கிறாள். அதற்கு அவளுடைய பெற்றோரும் சம்மதித்து இன்று வங்கி விடுமுறை என்று அவளிடம் சொன்னார்கள். ஆனால் அவள் மீண்டும் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கினாள். நான் என் மாமா அழுது பார்த்ததே இல்லை. இதுதான் முதல்முறை. அவர் எப்படியோ அந்த பணத்தை தயார் செய்துவிட்டார். இப்போது அவர்கள் ஐபோன் வாங்கப் போகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's this obsession with iPhone
byu/kajucatli inindiasocial
நேற்று பகிரப்பட்ட இந்த இடுகை பல கருத்துகளையும் பெற்று வருகிறது. இணையத்தில் பேசுபொருளாகவும் ஆகியுள்ளது. பலர் இந்த செயலை விமர்சித்தே வருகின்றனர். ‘குழுந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவுதான் கொடுக்க வேண்டும்’ என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.
- உங்கள் மாமாவிடம் சொல்லுங்கள். இதுவெறும் ஆரம்பம்தான். இதை பழக்கினால் இதுபோன்ற செயல்கள் தொடரும்.
- இது முழுவதும் அவளின் பெற்றோரின் தவறே. அவர்கள் ஏன் வாங்கி கொடுக்கிறார்கள்? அவர்கள் அப்பாவிகளா அல்லது அவள் ஒரே மகளா?
- எனக்கு 18 வயதாகிறது. எனக்கு ஐபோன் பிடிக்கும். ஆனால் என் குடும்பத்தின் நிலை எனக்கு தெரியும். எனக்கு என்ன போன் வேண்டும் என அப்பா கேட்டபோது, நான் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபின் நீங்கள் என்ன வாங்கி தருகிறீர்களோ அதை வாங்கி கொள்கிறேன் என தெரிவித்தேன். அவர் எனக்கு ஒரு நல்ல சாம்சங் A35 ஐ பரிசளித்தார். அது என்னுடைய முதல் போன் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதை எங்க அப்பா மாதச்சந்தா முறையில் வாங்கினார் என்பதை அறிந்தேன். உடனே அதை திருப்பி அளித்துவிட்டு, உங்களால் என்ன முடியுமோ அதை கொடுங்கள் போதும் என்றேன். அவரிடம் உள்ள தொகை குறித்து என்னிடம் கூறினார். நான் அதில் சாம்சங் M34 வாங்கினேன். என்னை நினைத்து என் தந்தை மிகவும் பெருமைப்பட்டார். என்னை வாழ்த்தினார். ஒரு குழந்தையா நாம பெற்றோர்களின் நிதிநிலையை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளுக்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. நான் உங்கள் மாமாவை நினைத்து கவலைப்படுகிறேன். இதை கேட்கவே கஷ்டமாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளனர்.