For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:29 AM Sep 28, 2025 IST | Web Editor
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரழந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "மிகுந்த துயரத்தோடு, கணத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை.

நேற்று இரவு 7.30 மணிக்கு கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு செல்வதாக தகவல் வந்தது. உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தினேன். அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து, அமைச்சர்களை கரூருக்கு அனுப்பி வைத்தேன். தலைமைச் செயலகத்தில் உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கரூரில் உள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.

அருகாமை மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளையும் உதவிக்கு அனுப்பி வைத்தேன். இந்த சம்பவத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம். கொடூரமான காட்சிகள்,தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் 1 மணி அளவில் புறப்பட்டு கரூர் வந்தேன்.

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள் என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் உட்படுத்த தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement