Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்” - ராகுல் காந்தி உருக்கம்!

04:04 PM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

“பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே லடாக் அருகில் உள்ள தவ்லத் பேட் ஓல்டி பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தது.

இதற்காக டி-72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கியுடன் 5 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீட்புப் படையினர் தேடலில்  ஈடுபட்ட நிலையில்,  இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CongressFloodINCIndian SoldiersLadakhNews7Tamilnews7TamilUpdatesRahul gandhiRajnath singh
Advertisement
Next Article