For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது" - அமைச்சர் முத்துசாமி!

கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மீதான புகார்களை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
12:33 PM Oct 07, 2025 IST | Web Editor
கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மீதான புகார்களை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது    அமைச்சர் முத்துசாமி
Advertisement

ஈரோடு திண்டலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் கூடுதலாக 34 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "76 குடும்பங்களுக்காக அவர்களை காப்பாற்றுவதோடு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் 271 கம்பங்கள் புதிதாக அமைத்து கத்திரி மலையில் 3.5 செலவில் திமுக அரசால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறியது, பெரியது என்று இல்லாமல் அரசால் தீர்வு காணப்படுகிறது.

சாதாரண குழந்தைகள் மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் திமுக அரசால் திறக்கப்படுகிறது. சிக்கைய அரசு கல்லூரியில் விரைவில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் திறக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து கரூர் சம்பவத்தில் அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தவர், "ஒளிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து காட்சிகளையும் நீங்கள் நன்றாக பாருங்கள் மனசாட்சியுடன் பேசுங்கள், கருர் செய்தி தெரிந்ததும் இருப்பதை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். விசாரணை கமிஷன் விஜய் கைதுக்காக போடப்பட்டுள்ளது. விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். திமுக பயப்படவில்லை. கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது, விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement